/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தனியார் வங்கி ஊழியரிடம் 121 போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல்
/
தனியார் வங்கி ஊழியரிடம் 121 போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல்
தனியார் வங்கி ஊழியரிடம் 121 போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல்
தனியார் வங்கி ஊழியரிடம் 121 போதை 'ஸ்டாம்ப்' பறிமுதல்
ADDED : நவ 05, 2025 03:01 AM
மீனம்பாக்கம்: மீனம்பாக்கம் ரயில் நிலைய சாலையில், போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில், சுற்றித்திரிந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து, போலீசாரின் பிடியில் இருந்து தப்பியோட முயன்றார்.
அவரை சுற்றி வளைத்து பிடித்து சோதனை மேற்கொண்டனர். இதி ல், தடை செய்யப்பட்ட போதைப் பொருளா ன, 121 எல்.எஸ்.டி., ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், பொழிச்சலுார், மருதுபாண்டியர் தெருவைச் சேர்ந்த தீபக், 24, என்பதும், தனியார் வங்கியில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது. அவரை கைது செய் த போலீசார், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவரது கூட்டாளியை தேடி வருகின்றனர்.