/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இரண்டே ஆண்டில் பல்லிளித்த எஸ்.எம்.நகர் சாலையால் அவதி
/
இரண்டே ஆண்டில் பல்லிளித்த எஸ்.எம்.நகர் சாலையால் அவதி
இரண்டே ஆண்டில் பல்லிளித்த எஸ்.எம்.நகர் சாலையால் அவதி
இரண்டே ஆண்டில் பல்லிளித்த எஸ்.எம்.நகர் சாலையால் அவதி
ADDED : நவ 05, 2025 03:01 AM

ஆவடி: திருமுல்லைவாயில், சாலை அமைக்கப்பட்ட இரண்டே ஆண்டுகளில் குண்டும் குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர்.
ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சத்தியமூர்த்தி நகர் காவலர் குடியிருப்பில் 1,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த சாலையில், 1,968 அடி நீளம் ஆவடி மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மீதமுள்ள 2,000 அடி சாலை மத்திய அரசு கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இந்த சாலையில், தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
கடந்த 2023 மார்ச் மாதம், 'பேட்ச் ஒர்க்' செய்யப்பட்டு, சாலை சீர மைக்கப்பட்டது. சிறிது நாட்களில் சாலை மீண்டும், குண்டும் குழியுமாக மாறிய நிலையில், கடந்த 2023 இறுதியில், தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக மாறியுள்ளது.
இந்த நிலையில், கடந்த வாரம் காவலர் குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை போலீசார் ஒன்று சேர்ந்து, குண்டும் குழியுமான சாலையை சிமென்ட் கலவை கொட்டி சீரமைத்தனர்.
தொடர் மழையால், சிமென்ட் கலவை இருந்த இடம் தெரியாமல் போய், மீண்டும் போக்குவரத்து லாயக்கற்ற நிலையில் மாறியுள்ளது. விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படும் முன், சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

