/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
புழல் உபரி கால்வாயில் நீரோட்டம் பாதிப்பு மூன்று வார்டுகளுக்கு வெள்ள அபாயம்

ADDED : நவ 05, 2025 03:00 AM

மணலி: புழல் உபரிக் கால்வாயில், ஆகாயத்தாமரை செடிகளால் நீரோட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால், மணலியின் மூன்று வார்டுகளில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரி உபரி நீரானது, புழல், காவாங்கரை, சாமியார் மடம், வடபெரும்பாக்கம், ஆமுல்லைவாயல், எஸ்.ஆர்.எப்., பர்மா நகர் உயர்மட்ட பாலம், சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக, கொசஸ்தலை உபரி நீருடன் கலந்து சென்று, கடலில் கலக்கிறது.
இந்நிலையில், ஆமுல்லைவாயல் மேம்பாலம் அருகே, 300 மீட்டர் துாரத்திற்கு, ஆகாய தாமரைச் செடிகள், நீரோட்டத்தை தடுக்கும் வகையில் குவிந்துள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் கவனித்து, இந்த ஆகாயத்தாமரை செடிகளை அகற்றினால் மட்டுமே, உபரி நீர், தங்கு தடையின்றி செல்லும்.
இல்லாவிடில், மணலி, 16, 17, 18 ஆகிய வார்டுகள் வெள்ள நீரால் பாதிக்கும்.
தவிர ஆமுல்லைவாயல் உயர்மட்ட பாலம் அருகே, 2017ம் ஆண்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி மரியம் பல்லவி பல்தேவ் தலைமையிலான மழை கண்காணிப்பு குழுவால், மீட்கப்பட்ட 'மடுவு' நீர்வழிப் பாதையை, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.