/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை மீட்டு தரக்கோரி காதல் கணவர் போலீசில் புகார்
/
மனைவியை மீட்டு தரக்கோரி காதல் கணவர் போலீசில் புகார்
மனைவியை மீட்டு தரக்கோரி காதல் கணவர் போலீசில் புகார்
மனைவியை மீட்டு தரக்கோரி காதல் கணவர் போலீசில் புகார்
ADDED : நவ 05, 2025 03:02 AM
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, ஜெ.ஜெ.நகரைச் சேர்ந்தவர் விஷ்ணுஹரி, 20; கல்லுாரி மாணவர். இவர், விருதுநகர் மாவட்டம் சிவகாசியைச் சேர்ந்த அனு, 19, என்பவருடன் சமூக வலைதளத்தில் பழகினார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். அனுவுக்கு அவரது வீட்டில் திருமணம் நிச்சயிப்பதாக கூறியதால், அவரை மதுரை வரவழைத்து கடந்த மாதம் 6ம் தேதி விஷ்ணுஹரி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்து, சென்னைக்கு அழைத்து வந்துள்ளார்.
இந்த விபரம் அறிந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்களுடன் சென்னை வந்து விஷ்ணுஹரி வீட்டாரிடம் பேசி, முறைப்படி திருமணம் செய்து வைப்பதாக கூறி, மகளை ஊருக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
இரண்டு வாரங்கள் மொபைல் போனில் பேசி வந்த நிலையில், திடீரென அனுவின் மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் விஷ்ணுஹரியை தொடர்பு கொண்டு, தன்னை ஒடிஷா மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்திருப்பதாக, அனு தெரிவித்துள்ளார். இதையடுத்து, புளியந்தோப்பு காவல் நிலையத்தில் நேற்று, தன் மனைவியை மீட்டு தரக்கோரி விஷ்ணுஹரி புகார் அளித்துள்ளார்.

