/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 16 ஆண்டு சிறை
/
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 16 ஆண்டு சிறை
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 16 ஆண்டு சிறை
மாணவியருக்கு பாலியல் தொந்தரவு ஆசிரியருக்கு 16 ஆண்டு சிறை
ADDED : நவ 13, 2024 02:29 AM
சென்னை:சென்னை கே.கே.நகரிலுள்ள தனியார் பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணிபுரிந்தவர் ராஜகோபாலன். இவர், வகுப்பறையில் மாணவியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
கடந்த 2021ல், இவர் மீது மாணவியர் அளித்த புகாரின்படி, வடபழனி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' வழக்கு பதிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை, சென்னை 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர் ராஜகோபாலன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எட்டு மாணவியர் புகார் அளித்துள்ளனர். ஒவ்வொரு மாணவியின் புகாருக்கும் தலா இரு ஆண்டுகள் வீதம், 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி தீர்ப்பளித்தார்.