/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.17 கோடியில் மழைநீர் வடிகால் கோயம்பேடு சந்தையில் தீர்வு
/
ரூ.17 கோடியில் மழைநீர் வடிகால் கோயம்பேடு சந்தையில் தீர்வு
ரூ.17 கோடியில் மழைநீர் வடிகால் கோயம்பேடு சந்தையில் தீர்வு
ரூ.17 கோடியில் மழைநீர் வடிகால் கோயம்பேடு சந்தையில் தீர்வு
ADDED : நவ 19, 2024 12:31 AM

கோயம்பேடு,
கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதியில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வாக, 17 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் தேங்கும் மழைநீர் வெளியேற, 3.8 கி.மீ., துாரத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கிருந்து வெளியேறும் மழைநீர், கோயம்பேடு சந்தை 'ஈ' சாலை வழியாக, 'பி' சாலை சென்று, அங்கிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை குறுக்கே சென்று, கூவம் ஆற்றில் கலக்கிறது.
இதில், பி சாலையில் உள்ள மழைநீர் வடிகாலின் ஒரு பகுதி மெட்ரோ ரயில் அலுவலகம் வழியாக செல்வதாலும், கூவம் ஆற்றில் மழைநீர் வெளியேறும் பகுதி தனியார் நிலத்தில் வருவதாலும் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த மழைநீர் வடிகால்கள் முறையாக செயல்படாததால், சமீபத்தில் பெய்த சாதாரண மழைக்கே கோயம்பேடு சந்தை வளாகம் மற்றும் பி சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கியது.
இதையடுத்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் கோயம்பேடு சந்தை வளாகத்தில் உள்ள மழைநீர் வடிகால் துார்வாரும் பணிகள் நடந்தன.
அத்துடன், கோயம்பேடு சந்தை பி சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் வடிகாலை உடைத்து விட்டு, 17 கோடி ரூபாய் மதிப்பில் புது மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
பூந்தமல்லி நெடுஞ்சாலையில் புது மழைநீர் வடிகால் அமைத்து, நெடுஞ்சாலை குறுக்கே செல்லும் கல்வெட்டில் இணைக்கப்பட உள்ளது.
நெடுஞ்சாலையின் எதிர்புறம் உள்ள நீர்வளத்துறை இடத்தில், கூவம் ஆற்றில் மழைநீர் வடிகால் இணைய மழைநீர் வடிகால் அமைக்கப்பட உள்ளது.
இந்த மழைநீர் வடிகால்பணிகள் நிறைவடைந்தால், கோயம்பேடு சந்தை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.