/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 17 ரயில்கள் ரத்து
/
கும்மிடிப்பூண்டி தடத்தில் இன்று 17 ரயில்கள் ரத்து
ADDED : ஜூலை 26, 2025 12:18 AM
சென்னை :கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணி, இன்று மதியம் 1:15 மணி முதல் மாலை 5:15 மணி வரை நடக்கிறது.
இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்ட்ரல் - சூலுார்பேட்டை, கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும், கடற்கரை - கும்மிடிப்பூண்டி வழித்தடத்திலும் இன்று, 17 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.
14 சிறப்பு ரயில்கள் இதற்கிடையே, பயணியர் வசதிக்காக, சென்ட்ரல் - பொன்னோரி, பொன்னேரி - சென்ட்ரல், கடற்கரை - பொன்னேரி, பொன்னேரி - கடற்கரை இடையே மொத்தம் 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
தாம்பரம் - திருச்சி
சிறப்பு ரயில் நீட்டிப்பு
திருச்சி - தாம்பரம்; தாம்பரம் - திருச்சி இடையே செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் தற்போது இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் வரும் ஆக., 1 முதல் 31ம் தேதி வரை நீட்டித்து இயக்கப்படுகிறது. இந்த ரயில்களின் முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்கும்.
கூடுதல் 'ஏசி' பெட்டி சென்னை சென்ட்ரல் - கர்நாடகா மாநிலம் கே.எஸ்.ஆர்., பெங்களூரு இடையே இயக்கப்படும் ஷதாப்தி விரைவு ரயில்களில், பயணியர் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே, இந்த விரைவு ரயிலில் நாளை முதல் தலா ஒரு 'ஏசி' பெட்டி நிரந்தரமாக இணைத்து இயக்கப்பட உள்ளது. ரயிலின் மொத்த பெட்டி எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்துள்ளது.