/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு
/
அரசு கல்லுாரியில் 178 மாணவருக்கு பட்டமளிப்பு
ADDED : மார் 17, 2024 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:பெரும்பாக்கம் அரசு கலைக் கல்லுாரி, 2016ல் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, முதல் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2021ம் ஆண்டு முடித்த, 480 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
நேற்று, இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், 2022ல் பட்டப்படிப்பு முடித்த, 178 மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முதல்வர் சக்தி தலைமை வகித்தார்.
நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லுாரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன், தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கினர்.

