/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தென்மேற்கு பல்கலை நீச்சல் 1,800 வீரர்கள் உற்சாகம்
/
தென்மேற்கு பல்கலை நீச்சல் 1,800 வீரர்கள் உற்சாகம்
ADDED : டிச 22, 2024 12:18 AM

சென்னை,
அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, தென்மேற்கு மண்டல பல்கலை நீச்சல் மற்றும் டைவிங் சாம்பியன்ஷிப் போட்டிகளை, காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நேற்று துவக்கின.
பல்கலைகளுக்கு இடையிலான இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 216 பல்கலை அணிகளின், 1,800 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலை நடந்த ஆண்களுக்கான 400 மீ., 'ப்ரீஸ்டைல்' போட்டியில், பெங்களூரு கிறிஸ்ட் பல்கலையின் அனீஷ் கவுடா முதலிடத்தையும், விஸ்வேஸ்வரா பல்கலையின் ஷிவாங்க் விஸ்வநாத் இரண்டாம் இடத்தையும் பிடித்தனர்.
பெண்களில், பெங்களூரு ஜெயின் பல்கலை பவ்யா சச்தேவா முதலிடத்தையும், அதே பல்கலையின் மற்றொரு வீராங்கனை ஜெடிடா, இரண்டாம் இடத்தையும் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான 200 மீ., 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில், மும்பை பல்கலை தீபக் தங்கமும்; பெங்களூரு ஜெயின் பல்கலையின் மணிகண்டா வெள்ளியும், சென்னை பல்கலையின் அன்பு கதிர் வெண்கலமும் வென்றனர்.