/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முக அடையாள செயலியால் சிக்கிய 18,000 பேர்
/
முக அடையாள செயலியால் சிக்கிய 18,000 பேர்
ADDED : நவ 04, 2025 12:38 AM
சென்னை: வாகன சோதனை செய்தபோது, எப்.ஆர்.எஸ்., எனும் முக அடையாள செயலி வாயிலாக, 18,000 குற்றவாளிகள், போலீசாரிடம் சிக்கி உள்ளனர்.
போலீசார் வாகன சோதனையில் ஈடுபடும்போது, சந்தேக நபர்கள் குறித்த விபரங்களை, அவர்கள் உடனடியாக தெரிந்து கொள்ள, சென்னையில் எப்.ஆர்.எஸ்., எனும் முக அடையாளங்கள் வாயிலாக, துப்பு துலக்கும் செயலியை போலீசார் பயன்படுத்தப்படுத்தி வருகின்றனர்.
இச்செயலி வாயிலாக, இந்த ஆண்டு ஜூலை வரை, வாகன சோதனையில் குற்றப்பின்னணி உடைய, 18,000 பேரை கண்டறிந்து, காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் உரிய விசாரணை நடத்தி கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
ரோந்துப் பணி மற்றும் வாகன சோதனையில் மட்டுமல்லாது, தனி நபர்கள் மற்றும் அலுவலகங்கள் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, அந்த நபர்கள் குறித்த விபரங்கள் கேட்டு காவல் துறையின் இணையதளத்தில் விண்ணப்பிக்கின்றனர்.
அவற்றின் மீது, எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக சோதனை செய்தில், 1,561 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

