UPDATED : அக் 28, 2026 08:30 PM
ADDED : அக் 28, 2026 08:25 PM
அ நிறம் | அளவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, வட சென்னை, சேலம் மேட்டூர் அனல் மின் நிலையங்களில் தலா, 210 மெகா வாட் திறன் உடைய ஒரு அலகில், ஆண்டு பராமரிப்பு பணிக்காக, 15 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறன் உடைய, மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம் மாவட்டம் மேட்டூரில் தலா, 210 மெகா வாட் திறனில் நான்கு அலகுகள் உடைய மேட்டூர் அனல் மின் நிலையமும் உள்ளது.
வட சென்னை மின் நிலையத்தில் முதலாவது அலகிலும், மேட்டூரில் இரண்டாவது அலகிலும் ஆண்டு பராமரிப்பு பணிக்காக நேற்று முன்தினம் இரவு முதல், 15 நாட்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
