தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரவுடி கொலையில் மேலும் இருவர் பிடிபட்டனர்

ரவுடி கொலையில் மேலும் இருவர் பிடிபட்டனர்

ரவுடி கொலையில் மேலும் இருவர் பிடிபட்டனர்


ADDED : அக் 28, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆவடி: திருமுல்லைவாயில், நாகம்மை நகர், ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் கோகுல், 30; ரவுடி. இரு வாரங்களுக்கு முன், கஞ்சா வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர், சமீபத்தில் வெளியே வந்தார்.

நேற்று (அக்.,27) இரவு, அதே பகுதியைச் சேர்ந்த நண்பர் ராஜேஷ், 31, வீட்டிற்கு சென்றார். அங்கு மது அருந்தி கொண்டிருந்த ராஜேஷ், திருநின்றவூர் நிர்மல்குமார், 29, வில்லிவாக்கம் சந்தோஷ், 30, ஆகியோரிடம், தனக்கும் மது ஊற்ற சொல்லி கேட்டார்.

அப்போது ஏற்பட்ட தகராறில், கோகுல் வைத்திருந்த கத்தி கீழே விழுந்தது. ராஜேஷ் அதை கையில் எடுத்து, கோகுலை குத்தி கொலை செய்தார். பின், திருமுல்லைவாயில் போலீசில் அவர் சரணடைந்தார். இந்நிலையில், தப்பியோடிய நிர்மல்குமார், சந்தோஷ் இருவரையும், போலீசார் இன்று (அக்.,28) கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us