/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கழிவுநீர் வெளியேறும் பிரச்னையால் 200 போலீசார் குடும்பங்கள் பரிதவிப்பு
/
கழிவுநீர் வெளியேறும் பிரச்னையால் 200 போலீசார் குடும்பங்கள் பரிதவிப்பு
கழிவுநீர் வெளியேறும் பிரச்னையால் 200 போலீசார் குடும்பங்கள் பரிதவிப்பு
கழிவுநீர் வெளியேறும் பிரச்னையால் 200 போலீசார் குடும்பங்கள் பரிதவிப்பு
ADDED : அக் 07, 2025 12:44 AM

சென்னை, புரசை வாக்கம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண, காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், 200 குடும்பங்கள் சுகாதார சீர்கேடில் சிக்கி த வித்து வருகின்றனர்.
புர சைவாக்கம், கங்காதீஸ்வரர் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில், 200 குடும்பங்கள் வசிக்கின்றன. 2002ம் ஆண்டு கட்டப்பட்ட இக்காவலர் குடியிருப்பில், முறையாக கழிவுநீர் வசதி செய்யப்படவில்லை.
இதன் காரணமாக அவ்வப்போது கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு வளாகம் முழுதும் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு, கொசு தொல்லையும், தொற்று நோய் பரவும் அபாயமும் நிலவுகிறது.
இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பலமுறை புகார் அளித்தனர். 10 நாட்களுக்கு முன் கூட, கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி மனு அளித்தனர். ஆனால், கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட மனுக்களுக்கு இதுநாள் வரை தீர்வு காணப்படாதது, அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து காவலர்கள் கூறியதாவது:
புரசைவாக்கம் காவலர் குடியிருப்பு, செயல்பாட்டிற்கு வந்ததில் இருந்தே கழிவுநீர் பிரச்னை உள்ளது. அவ்வப்போது கழிவுநீர் பிரச்னை அதிகரிக்கும்போது, ஒவ்வொரு போலீசாரும் தங்களது சொந்த பணத்தை செலவு செய்து வெளியாட்களை வைத்து, கழிவுநீரை அகற்றி வந்தோம்.
இதை நன்கு அறிந்துக் கொண்ட காவல் அதிகாரிகள், கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு காணாமல், தங்களை அலைக்கழித்து வருகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வா று அவர்கள் கூறினர்.