/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிதி ஒதுக்கியும் சுற்றுச்சுவர் கட்டாததால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் கோவில் நிலம்

ADDED : அக் 07, 2025 12:44 AM

பூந்தமல்லி, வரதராஜ பெருமாள் கோவில் நிலத்தில் சுற்றுச்சுவர் அமைக்க 53 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியும் பணிகள் துவங் காததால், கோவில் நிலம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நிலை உள்ளது.
பூந்தமல்லியில், திருக்கச்சிநம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு சொந்தமான 4.29 ஏக்கர் காலி நிலம், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து பாரிவாக்கம் செல்லும் சாலையோரம் உள்ளது.
இந்த நிலத்தை ஆக்கிரமித்து ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள், தள்ளுவண்டி கடைகள் அமைக்கப்பட்டுள்ளன; தனியார் வாகனங்கள் நிறுத்துமிடமாகவும் மாற்றப்பட்டு உள்ளது.
கோவில் நிலத்தை பாதுகாக்க, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் 53 லட்சம் ரூபாய் மதிப்பில் சுற்றுச்சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. மே 9ம் தேதி இதற்கான பணி துவங்கியது.
தற்போது வரை, சுற்றுச்சுவர் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், கோவில் நிலம் மேலும் ஆக்கிரமிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், 'கோவில் நிலத்தில், ஆறு ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. இவற்றை அகற்றிய பின் பணிகள் துவங்க உள்ளோம்' என்றனர்.