/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்து நாசம்
/
சாலையில் சென்ற கார் தீ பிடித்து எரிந்து நாசம்
ADDED : அக் 07, 2025 12:43 AM

பெருங்களத்துார், நெற்குன்றத்தை சே ர் ந்தவர் விஷ்ணு குமார், 50; தினியார் நிறுவன உள் அரங்க வடிவமைப்பாளர். நேற்று காலை, முகப்பேரில் இருந்து பணி நிமித்தமாக, 'டஸ்டர்' காரில் பெருங் களத்துாருக்கு வந்தார்.
புது பெருங்களத்துார், காமராஜர் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. சுதாரித்துக்கொண்ட விஷ்ணுகுமார், காரை சாலையோரம் நிறுத்தி, முன்பகுதியை திறக்க முயன்றார்.
அப்போது, முன்பகுதி திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று, காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில், கார் முழுதும் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து, பீர்க்கன்காரணை போலீசார் விசாரிக்கின்றனர்.