/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
விரைவு ரயில்களில் 21.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
/
விரைவு ரயில்களில் 21.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
விரைவு ரயில்களில் 21.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
விரைவு ரயில்களில் 21.5 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது
ADDED : செப் 27, 2024 12:47 AM
சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் நான்காவது நடைமேடையில் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து, பினாகினி விரைவு ரயில் வந்தது.
இதில் வந்த இரு பயணியர் மீது, ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் வந்ததால் அவர்களின் பையை சோதித்தபோது, அதில், 14.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இதன் மதிப்பு 2.80 லட்சம் ரூபாய்.
இதையடுத்து, கஞ்சா கடத்திய தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த குணசேகரன், 41, விழுப்புரம் மாவட்டம் பிரவீன், 23, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இதேபோல், மங்களூர் விரைவு ரயிலில் ஏழு கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருவரையும், ரயில்வே போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.