/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முகப்பேரில் 271 மதுபாட்டில் பறிமுதல்
/
முகப்பேரில் 271 மதுபாட்டில் பறிமுதல்
ADDED : ஜூன் 30, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முகப்பேர்,:முகப்பேரில் 271 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முகப்பேர் மேற்கு, ரெட்டிப்பாளையம் சாலையில், சட்டவிரோத விற்பனைக்காக மதுபாட்டிலை பதுக்கி வைத்திருந்த, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரகாஷ், 43, என்பவரை நொளம்பூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும், வெள்ளாளர் தெருவில், கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்த, அதே பகுதியைச் சேர்ந்த வேலுசாமி, 43, என்பவரையும் கைது செய்தனர்.
இவர்களிடம் இருந்து, 271 மதுபாட்டில்கள் 10,000 ரூபாய் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர்.