/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்
/
282 கிலோ போதை வஸ்துகள்; ஆலந்துாரில் பறிமுதல்
ADDED : செப் 23, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிமலை : ஆலந்துார் நீதிமன்றம் அருகே, நேற்று முன்தினம் இரவு பரங்கிமலை போலீசார் வாகன சோதனை நடத்தினர். ஒரு காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் 'கூலிப், ஹான்ஸ், பான்மசாலா' உள்ளிட்ட தடை செய்யப்பட்ட 282 கிலோ போதை பொருட்கள் சிக்கின. விசாரணையில், பம்மல் பகுதியைச் சேர்ந்த மோகன்ராம், 39, மகேஷ், 43, என தெரிந்தது.
பெங்களூரில் இருந்து போதை பொருட்கள் வாங்கி வந்து, சென்னையில் விற்பனை செய்வது தெரிந்தது.
இரண்டு பேரையும் கைது செய்து விசாரித்துவருகின்றனர்.