/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயின் பறித்த 3 பேர் கைது
/
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயின் பறித்த 3 பேர் கைது
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயின் பறித்த 3 பேர் கைது
கோயம்பேடு பஸ் நிலையத்தில் செயின் பறித்த 3 பேர் கைது
ADDED : நவ 16, 2025 02:26 AM
கோயம்பேடு: கோயம்பேடு பேருந்து நிலையத்தில், மது போதையில் துாங்கிய நபரிடம் செயின் பறித்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
திருமங்கலம், காந்தி நகர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 42; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 13ம் தேதி இரவு நண்பருடன் மது அருந்தி, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் துாங்கினார்.
எழுந்து பார்த்தபோது, அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த மொபைல் போனை, பெண் உட்பட நான்கு பேர் திருட முயன்றது தெரியவந்தது.
சுதாரித்த ஸ்ரீதர், மொபைல் போனை இறுக பிடித்தபோது, அவரது கழுத்தில் இருந்த 1 சவரன் செயினை பறித்து அங்கிருந்து தப்பி சென்றனர்.
இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர். இதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக், 19, புழல் காவாங்கரையைச் சேர்ந்த பிரகாஷ், 19, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தினகரன், 19, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
போலீசார் மூவரையும் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட பெண்ணை தேடி வருகின்றனர்.

