/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கட்டட அனுமதிக்கு மேன்பவர் ஏஜன்சி? தேடலில் இறங்கியது சி.எம்.டி.ஏ.,
/
கட்டட அனுமதிக்கு மேன்பவர் ஏஜன்சி? தேடலில் இறங்கியது சி.எம்.டி.ஏ.,
கட்டட அனுமதிக்கு மேன்பவர் ஏஜன்சி? தேடலில் இறங்கியது சி.எம்.டி.ஏ.,
கட்டட அனுமதிக்கு மேன்பவர் ஏஜன்சி? தேடலில் இறங்கியது சி.எம்.டி.ஏ.,
ADDED : நவ 16, 2025 02:25 AM
சென்னை: கட்டுமான திட்ட அனுமதி பணிகளில், தினக்கூலி பணியாளர்களை பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், தனியார் 'மேன்பவர்' நிறுவனங்களுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.
சென்னை பெருநகரில் அடுக்குமாடி கட்டடங்கள், மனைப்பிரிவு திட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு உள்ளிட்ட அனைத்து பணிகளும், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டுள்ளன.
இதற்காக ஒற்றை சாளர முறை இணையதளம் துவங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் கட்டுமான நிறுவனங்கள், பொதுமக்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
இதில் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு பதிவு எண் ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.
வழக்கமாக இந்த பணியில் திட்ட உதவியாளர்கள், உதவி திட்ட அலுவலர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
ஆனால், புதிதாக பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், கட்டுமான திட்ட அனுமதி பிரிவில் சரி பார்ப்பு, பரிசீலனை பணிகளில் தினக்கூலி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
நிரந்தர பணியாளர்கள் இருக்கும் போது, முக்கியமான பணிகளில் தினக்கூலி பணியாளர்களை ஈடுபடுத்துவது ஏன் என கேள்வி எழுந்தது.
இதையடுத்து, கட்டட அனுமதி பணியில் அலுவலர்களுக்கு உதவ தொழில்முறை வல்லுனர்களை நியமிக்க, சி.எம்.டி.ஏ., முடிவு செய்தது. இதற்கான வல்லுனர்களை அனுப்ப, தனியார் மேன்பவர் ஏஜன்சிகளுக்கு சி.எம்.டி.ஏ., அழைப்பு விடுத்துள்ளது.
இதில் தேர்வு செய்யப்படும் நிறுவனம் வாயிலாக தொழில்முறை வல்லுனர்கள் பயன்படுத்தப்படுவர் என அதிகாரிகள் கூறினர்.

