/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 மெட்ரோவில் வணிக மேம்பாடு ஒப்பந்தம்
/
3 மெட்ரோவில் வணிக மேம்பாடு ஒப்பந்தம்
ADDED : பிப் 07, 2025 12:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், திருமங்கலத்தில் எம்.வி.என்., நகர், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்கு மெட்ரோ ரயில் நிலையங்களில், வணிக மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, மெட்ரோ ரயில் நிறுவனம், ஆர்.வி.அசோசியேட்ஸ் மற்றும் அனராக் பிராபர்ட்டி ஆகிய கூட்டு நிறுவனத்துடன், 41.87 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பணி மார்ச்சுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

