/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொடுங்கையூரில் 3 நிறுவனங்கள் தீக்கிரை பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
/
கொடுங்கையூரில் 3 நிறுவனங்கள் தீக்கிரை பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
கொடுங்கையூரில் 3 நிறுவனங்கள் தீக்கிரை பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
கொடுங்கையூரில் 3 நிறுவனங்கள் தீக்கிரை பல கோடி ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
ADDED : ஆக 08, 2025 12:41 AM

கொடுங்கையூர், கொடுங்கையூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில், விடிய விடிய கொழுந்துவிட்டெரிந்த தீயில் பெயின்ட், அட்டை மற்றும் முக கவசம் தயாரிக்கும் நிறுவனங்களில், பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனி 2வது தெருவில், 'ஜூபிலி எக்போஸ்ட் கெமிக்கல், லலித் பேக்கேஸ் கார்டன் பாக்ஸ், ஸ்ரீ பேப்ரிக் மாஸ்க்' ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
நேற்று முன்தினம் இரவு, ஜூபிலி எக்போஸ்ட் கெமிக்கல் என்ற ரசாயன தயாரிப்பு நிறுவனத்தில், நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது.
தகவலறிந்து, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள எட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த, 50க்கும் மேற்பட்ட வீரர்கள், தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், 'காஸ்' சிலிண்டர் மற்றும் தின்னர் பாக்ஸ்கள் வெடித்து சிதறியது, கொழுந்து விட்டெரிந்த தீயால் பதற்றமான சூழல் நிலவியது. சுற்றுவட்டார மக்களுக்கு, சுவாச பிரச்னை மற்றும் மூச்சு திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சுற்றுவட்டார பகுதிமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். விடிய விடிய தீயணைப்பு வீரர்கள் போராடி, அதிகாலையில், 3:00 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில், மூன்று நிறுவனங்களின் பொருட்கள், கட்டுமானங்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார், இரு தோஸ்த் சரக்கு வாகனங்கள் என, பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் நாசமாயின.
நேற்று மதியம் வரை, தீ விபத்திற்குள்ளான கட்டடங்களை குளிர்விக்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். சம்பவம் குறித்து, வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.