/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?
/
3 கடைகளில் கைவரிசை 'மங்கி குல்லா' நபர் யார்?
ADDED : மார் 05, 2024 12:26 AM
பூந்தமல்லி, பூந்தமல்லி டிரங்க் சாலையில், ஏராளமான வணிக கடைகள் உள்ளன. இங்கு பனையாத்தம்மன் கோவில் அருகே உள்ள துணிக்கடை, மளிகைக்கடை, இறைச்சிக்கடைகளை, நேற்று காலை அதன் உரிமையாளர்கள் திறக்க சென்றனர்.
அப்போது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. மூன்று கடைகளின் கல்லா பெட்டியில் இருந்து, 1 லட்சம் ரூபாய் மர்ம நபரால் திருடப்பட்டது தெரிய வந்தது.
இது குறித்து, பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதில், நள்ளிரவு 1:30 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் 'மங்கி குல்லா' அணிந்து முகத்தை மறைத்தவாறு இரும்பு ராடால் கடைகளின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று கொள்ளையடித்து தப்பி செல்வது தெரிய வந்தது. கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

