/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் 300 பெண்கள் உற்சாக பங்கேற்பு
/
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் 300 பெண்கள் உற்சாக பங்கேற்பு
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் 300 பெண்கள் உற்சாக பங்கேற்பு
'கேலோ இந்தியா' கிக் பாக்சிங் 300 பெண்கள் உற்சாக பங்கேற்பு
ADDED : ஜூலை 28, 2025 02:41 AM

சென்னை:'கேலோ இந்திய அஸ்மிதா' மகளிர் கிக் பாக்சிங் லீக் போட்டியில், 18 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.
மத்திய அரசின், 'கேலோ இந்திய அஸ்மிதா மகளிர் கிக் பாக்சிங்' லீக் போட்டி, தமிழ்நாடு அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், நேற்று கீழ்ப்பாக்கம் நேரு பார்க்கில் நடந்தது.
மாநில அளவிலான இப்போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை, மதுரை, கோவை, திருப்பூர் உட்பட, 18 மாவட்டங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.
இதில், புல் காண்டாக்ட், லைட் காண்டாக்ட், பாயின்ட் பைட்டிங், கிக் லைட், லோ கிக் உள்ளிட்ட ஏழு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. ஏழு வயது முதல் 40 வயதுக்குட்பட்டோர் வரை, பல்வேறு வயது வாரியாக போட்டிகள் நடந்தன.
காலை 10:30 மணிக்கு நடந்த துவக்க விழாவில், சென்னை மேயர் பிரியா, எஸ்.டி.ஏ.டி., பொது மேலாளர் சுஜாதா, காமன்வெலத் வீராங்கனையும், மாநில கிக் பாக்சிங் சங்கத்தின் துணை தலைவருமான ஆர்த்தி அருண் ஆகியோர், போட்டியை துவக்கி வைத்தனர்.
ஒரு நாள் மட்டுமே நடந்த இப்போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை பரிசுகள் வழங்கப்பட்டன.