/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அண்ணா நினைவு மாரத்தான் 354 வீரர்கள் பங்கேற்பு
/
அண்ணா நினைவு மாரத்தான் 354 வீரர்கள் பங்கேற்பு
ADDED : பிப் 02, 2025 08:38 PM

சென்னை:தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு மாரத்தான் போட்டி, நடத்தப்பட்டது.
போட்டிகள், 17 - 25 மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டோர் என, இரு பிரிவாக நடத்தப்பட்டது.
காலை 6:00 மணிக்கு நடந்த இப்போட்டியில், 210 வீரர் மற்றும் 144 வீராங்கனைகள் என, மொத்தம் 354 பேர் பங்கேற்றனர்.
சுவாமி சிவானந்தா சாலை, துார்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகே துவங்கிய போட்டி, தீவுத்திடல், காயிதே மில்லத் பாலம், அண்ணா சாலை வழியாக சென்று, மீண்டும் துார்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் முடிந்தது.
தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் ராஜா, போட்டியை துவக்கி வைத்தார்.
இறுதியில், வெற்றி பெற்ற 40 வீரர் - வீராங்கனைகளுக்கு, சான்றிதழ்கள் மற்றும் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

