/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
4ம் டிவிஷன் கால்பந்து: சுபாஷ் சந்திரபோஸ் அணி சாம்பியன்
/
4ம் டிவிஷன் கால்பந்து: சுபாஷ் சந்திரபோஸ் அணி சாம்பியன்
4ம் டிவிஷன் கால்பந்து: சுபாஷ் சந்திரபோஸ் அணி சாம்பியன்
4ம் டிவிஷன் கால்பந்து: சுபாஷ் சந்திரபோஸ் அணி சாம்பியன்
ADDED : ஜூன் 28, 2025 03:55 AM

சென்னை:சென்னை கால்பந்து சங்கம் சார்பில், ஆடவருக்கான நான்காம் டிவிஷன் கால்பந்து போட்டி, சென்னை, கண்ணப்பர் திடல் மைதானத்தில் நடந்து வந்தது.
இதில், சென்னை மட்டுமல்லாமல் பிற மாவட்ட அணிகளையும் சேர்த்து 13 அணிகள் மோதின. இந்த போட்டிகள், லீக் முறையில் நடந்தன. ஒவ்வொரு அணியும் 12 போட்டிகளில் விளையாடின.
அதன் இறுதி லீக் போட்டி, நேற்று நடந்தது. இதில் சுபாஷ் சந்திரபோஸ் அணி, சென்னை சாம்பியன்ஸ் அணியை எதிர்த்து மோதியது.
விறுவிறுப்பான ஆட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் அணி 2 - 0 என்ற கோல் கணக்கில், சென்னை சாம்பியன்ஸ் அணியை வீழ்த்தி, புள்ளி பட்டியலில் அதிகப் புள்ளிகள் பெற்றுச் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
சுபாஷ் சந்திரபோஸ் அணி இதுவரை விளையாடிய 12 போட்டியில் 11 வெற்றி, ஒரு டிரா என, 34 புள்ளிகள் பெற்று முதல் இடம் கைப்பற்றியது.