/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'கேக்' சாப்பிட்ட 5 பேர் 'அட்மிட்'
/
'கேக்' சாப்பிட்ட 5 பேர் 'அட்மிட்'
ADDED : ஜன 30, 2025 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலத்தைச் சேர்ந்தவர் பாண்டியன், 40. இவர், அடையாறு பகுதியில், சலவை தொழிலாளியாக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் இரவு, பணியிடத்தில் தெரிந்த நபர் ஒருவர், பாண்டியனுக்கு 'கேக்' கொடுத்துள்ளார்.
அதை, வீட்டிற்கு கொண்டுவந்து, தன் குடும்பத்தினருக்கு பாண்டியன் கொடுத்துள்ளார்.
'கேக்' சாப்பிட்ட மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட ஐவருக்கும், அடுத்தடுத்து வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதுகுறித்து, திருமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

