/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதையில் வாலிபரிடம் தகராறு ரவுடி உட்பட 5 பேருக்கு 'காப்பு'
/
போதையில் வாலிபரிடம் தகராறு ரவுடி உட்பட 5 பேருக்கு 'காப்பு'
போதையில் வாலிபரிடம் தகராறு ரவுடி உட்பட 5 பேருக்கு 'காப்பு'
போதையில் வாலிபரிடம் தகராறு ரவுடி உட்பட 5 பேருக்கு 'காப்பு'
ADDED : மே 30, 2025 12:23 AM
சென்னை :கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்குமார், 45. இவர், கடந்த, 22ம் தேதி இரவு, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மதுக்கூடத்தில் மது அருந்தி கொண்டிருந்தார்.
அங்கு, பாடல் ஒலிபரப்புவதில் வெங்கட்குமாருக்கும், ஐந்து பேர் குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஐவர், பீர் பாட்டில் மற்றும் கண்ணாடி டம்ளர்களால் வெங்கட்குமார் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, கொலை மிரட்டல் விடுத்து சென்றனர்.
படுகாயமடைந்த வெங்கட்குமாருக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின், மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில், பரமக்குடி காவல் நிலைய 'ஏ' பிளஸ் பழைய குற்றவாளியான நாகேந்திர சேதுபதி, 33, அ.தி.மு.க., உறுப்பினர் அஜய்ரோகன், 36, மயிலாப்பூர் பிரசாத், 33, விருகம்பாக்கம் கணேஷ்குமார், 42, சின்ன போரூர் தனசேகர், 29, தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.
தனிப்படை போலீசார், தேனியில் பதுங்கியிருந்த அஜய்ரோகன் மற்றும் நாகேந்திர சேதுபதி ஆகிய இருவரையும், நேற்று கைது செய்தனர். பிரசாத், கணேஷ்குமார், தனசேகர் ஆகியோர், சென்னையில் கைது செய்யப்பட்டனர்.