ADDED : டிச 01, 2024 09:29 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புயல், மழை காரணமாக, சாலையோரங்களில் இருந்த 30 மரங்கள் வேருடன் சாய்ந்தன. காந்தி இர்வின் மேம்பாலம், காமராஜர் சாலை காந்தி சிலை, தரமணி எஸ்.ஆர்.பி., உட்பட ஐந்து இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் சேதமடைந்தன.
அவற்றை சீரமைக்கும் பணியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். சீரமைப்பு பணிகள் முடியும் வரை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில், சுழற்சி முறையில் போலீசார் ஈடுபட்டனர்.