/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
முதிய தம்பதி தவறவிட்ட 5 சவரன் நகை மீட்பு
/
முதிய தம்பதி தவறவிட்ட 5 சவரன் நகை மீட்பு
ADDED : ஆக 17, 2025 12:57 AM
தாம்பரம்,தாம்பரம் ரயில் நிலையத்தில், முதிய தம்பதி தவறவிட்ட 5 சவரன் நகையை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
சூளைமேடு, பெரியார் பாதை பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன், 65. இவர், தன் மனைவியுடன் திருச்செந்துாருக்கு செல்ல, நேற்று முன்தினம் மாலை தாம்பரத்தில் இருந்து, 'திருச்செந்துார் எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஏறினார்.
ரயில் சிறிது துாரம் சென்றதும், 5 சவரன் நகை, 1,000 ரூபாய் அடங்கிய பையை, தாம்பரம் ரயில் நிலைய, எட்டாவது நடைமேடையில் தவறவிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறங்கிய தம்பதி, போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள், தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். எட்டாவது நடைமேடையில் இருந்த பையை மீட்ட தாம்பரம் ரயில் நிலைய போலீசார், காவல் நிலையம் எடுத்து சென்றனர். தாம்பரம் சென்ற வாசுதேவன் மற்றும் அவரது மனைவியிடம், நகை பை ஒப்படைக்கப்பட்டது.