/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
500 கிலோ குட்கா வானகரத்தில் பறிமுதல்
/
500 கிலோ குட்கா வானகரத்தில் பறிமுதல்
ADDED : மார் 14, 2024 12:34 AM

மதுரவாயல், வானகரம் சுங்கச்சாவடி அருகே நேற்று, மதுரவாயல் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரித்த போது, ஓட்டுனர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
ஆட்டோவில் இருந்த 'பார்சல்'களை சோதனை செய்த போது, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தன. அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில் அம்பத்துார் கள்ளிக்குப்பம், சக்தி நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந்த தங்கமாரியப்பன், 37, என தெரிந்தது.
இவர், வெளிமாநிலங்களில் இருந்து குட்கா வாங்கி வந்து, திருவேற்காடில் ஒரு குடோனில் பதுக்கி, கடைகளுக்கு சப்ளை செய்தது தெரிந்தது.
அவரிடம் இருந்து, 497 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், ஒரு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், மதுரவாயல் கந்தசாமி நகர், ஐந்தாவது தெருவைச் சேர்ந்த கருப்பசாமி, 58, என்பவர் குட்கா பதுக்கி விற்பது தெரிந்தது.
அவரை கைது செய்த போலீசார், 35 கிலோ குட்கா, 91,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

