/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பல் மருத்துவமனையில் 5.35 லட்சம் பேர் பயன்
/
அரசு பல் மருத்துவமனையில் 5.35 லட்சம் பேர் பயன்
ADDED : ஆக 06, 2025 12:35 AM
''சென்னை அரசு பல் மருத்துவ கல்லுாரி, 72 ஆண்டுகளுக்கு முன், 15 மாணவர்களுடன், பல் மருத்துவ பிரிவாக துவங்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று, 100 இளநிலை, 40 முதுநிலை பல் மருத்துவ இடங்களுடன் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
கடந்தாண்டு, பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 5.35 லட்சம் பேர் சிகிச்சை பெற்று பயன்பெற்றுள்ளனர். தினமும் உள்நோயாளியாகவும், புறநோயாளிகளாகவும், 1,500 பேர் பயன்பெற்று வருகின்றனர்.
இங்கு, 261.83 கோடி ரூபாயில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் அடுத்த மாதத்திற்குள் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
- சுப்பிரமணியன்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்.