/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்
/
595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்
595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்
595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்
ADDED : அக் 29, 2024 11:41 PM

சென்னை : சென்னை மாநகராட்சியில் ஒன்பது விளையாட்டு திடல்கள், 595 பூங்காக்களை தனியார் பராமரிக்க, ஒப்பந்தம் விடப்படுகிறது. மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பராமரிக்க, ஏழு இடங்களில், 'கோசாலை' அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது.
சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், நேற்று நடந்தது.
நேரமில்லா நேரத்தின்போது பேசிய, தி.மு.க., 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேஷ், ''சென்னையில் திடக்கழிவு பிரச்னை பிரதான ஒன்றாக உள்ளது. எனவே, திடக்கழிவுக்கென, தனியாக ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.
இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ''திடக்கழிவுக்கு என, நிலைக்குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலா பேசுகையில், ''கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், இலவசமாக அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
இதற்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பதிலளிக்கையில், ''பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்காகவே, கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாடி வரும் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்வதற்கு இலவசம்,'' என்றார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சியை சேர்ந்த பாத்திமா அஹமத் பேசுகையில், ''மெரினா நீச்சல் குளத்தில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.
துணை மேயர் மகேஷ்குமார் அளித்த பதில், ''மெரினா நீச்சல் குளத்தில் பெண் நீச்சல் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும். மேலும், நீள கொடி சின்னம் பெற, மெரினா கடற்கரையை மேம்படுத்தவும், அழகுப்படுத்தவும், 5.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.
சென்னை மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களுக்கும், கையடக்க கணினியான, 'டேப்' வழங்கப்பட்டது. இதற்காக தலா 47,646 ரூபாய் என, மொத்தம், 95.29 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.