/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கண் மருத்துவ சிகிச்சைக்கு எஸ்.பி.ஐ., வழங்கிய ரூ.60.77 லட்சம்
/
கண் மருத்துவ சிகிச்சைக்கு எஸ்.பி.ஐ., வழங்கிய ரூ.60.77 லட்சம்
கண் மருத்துவ சிகிச்சைக்கு எஸ்.பி.ஐ., வழங்கிய ரூ.60.77 லட்சம்
கண் மருத்துவ சிகிச்சைக்கு எஸ்.பி.ஐ., வழங்கிய ரூ.60.77 லட்சம்
ADDED : பிப் 15, 2024 12:54 AM
சென்னை, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் 'ஐ ரிசர்ச் சென்டர்' பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த மையத்திற்கு, பாரத ஸ்டேட் வங்கியின், சமூக பொறுப்பு நிதியில் இருந்து, 60.77 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான காசோலையை பாரத ஸ்டேட் வங்கியின் நிர்வாக இயக்குனர் வினய் எம்.டோன்ஸ், ஐ ரிசர்ச் சென்டரின் தலைவர் அதியா அகர்வாலிடம் வழங்கினார்.
டாக்டர் அதியா அகர்வால் கூறியதாவது:
ஏழை மக்களுக்கு பார்வை குறைபாட்டை சரி செய்வதற்கும், பார்வைத் திறனை திரும்ப வழங்குவதற்கும், எங்களது செயல் திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய பாரத ஸ்டேட் வங்கிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்களது கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மாதத்திற்கு 700க்கும் மேற்பட்ட கண்புரை நீக்க அறுவை சிகிச்சைகளை வழங்குகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.