/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
70வது ரயில்வே வார விழா 77 பேருக்கு விருது
/
70வது ரயில்வே வார விழா 77 பேருக்கு விருது
ADDED : நவ 08, 2025 02:35 AM
சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய மூன்று அதிகாரிகள் உட்பட 77 பேருக்கு, கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், விருதுகளை வழங்கி பாராட்டினார்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தின், 70வது ரயில்வே வார விழா, தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவில், 2024-25ம் நிதி ஆண்டில் சிறப்பாக பணியாற்றிய மூன்று அதிகாரிகள் உட்பட 77 பேருக்கு, கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் விருதுகளை வழங்கி பாராட்டினார்.
விழாவில், சைலேந்திர சிங் பேசுகையில், ''தாம்பரம் - செங்கல்பட்டு நான்காவது புதிய ரயில் பாதை பணிகள் விரைவில் துவங்கப்படும். இந்த பாதை பணி முடியும்போது, சென்னை ரயில் கோட்டத்தில் ரயில்கள் இயக்கத்தில் முக்கியத்துவம் பெறும்,'' என்றார்.

