/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.98 கோடியில் 5 ஏரி மேம்பாடு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
/
ரூ.98 கோடியில் 5 ஏரி மேம்பாடு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.98 கோடியில் 5 ஏரி மேம்பாடு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ரூ.98 கோடியில் 5 ஏரி மேம்பாடு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்
ADDED : அக் 30, 2024 12:25 AM
சென்னை, சென்னை புறநகரில், 5 ஏரிகளின் முகப்பு பகுதிகளை, 98.21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் திட்ட பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று, அடிக்கல் நாட்டினார்.
சென்னை புறநகரில் ஏரிகள், குளங்கள் வெவ்வேறு துறைகளால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை, பொதுமக்கள் அணுக முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில், பெரும்பாக்கம், முடிச்சூர், அயனம்பாக்கம், வேளச்சேரி, சீக்கினான் ஏரி உள்ளிட்டவற்றின் முகப்பு பகுதிகள், 100 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் என சி.எம்.டி.ஏ., அறிவித்தது. தனியார் கலந்தாலோசகர் வாயிலாக இதற்கான வடிவமைப்புகள் தயாரிக்கப்பட்டன.
ஏரிகள் விபரம்:
பெரும்பாக்கம் ஏரிக்கரையில், 4.61 ஏக்கர் பரப்பளவில், 23.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான பூங்கா உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த முடிச்சூர் ஏரிக்கரையில், 2.40 ஏக்கரில், 20.61 கோடி ரூபாயில், பூங்கா, மழை தோட்டம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
அம்பத்துார் அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில், 4.26 ஏக்கரில், 20.45 கோடி ரூபாய் செலவில், படகு சவாரி, விளையாட்டு திடல் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
வேளச்சேரி ஏரிக்கரையில், 1.91 ஏக்கர் பரப்பளவில், 19.40 கோடி ரூபாய் மதிப்பீட்டில், படகு சவாரி, பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.
தாம்பரம் அடுத்த சீக்கினான் ஏரிக்கரையில், 13 ஏக்கர் பரப்பளவில், 9.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நடைபாதை, யோகா பயிற்சி பகுதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இதேபோல், வேளச்சேரி மேம்பாலத்தின் கீழ் பகுதியில், பூங்கா அமைப்பது உள்ளிட்ட பணிகள், 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஆறு திட்டங்களுக்கும் பணிகளை துவக்கி வைக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.