/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நீரிழிவு விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய அழைப்பு
/
நீரிழிவு விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய அழைப்பு
நீரிழிவு விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய அழைப்பு
நீரிழிவு விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய அழைப்பு
ADDED : நவ 13, 2024 10:33 PM
சென்னை:நீரிழிவு நோய் தினம், நவ., 14ல் கடைபிடிக்கப்படுகிறது. இத்தினத்தை ஒட்டி, நீரிழிவு நோய் தாக்கம் மற்றும் விழிப்புணர்வு குறித்து, ராஜன் கண் மருத்துவமனை இயக்குநர் மோகன் ராஜன் கூறியதாவது:
நீரிழிவு ரெட்டினோபதி என்பது, விழித்திரையில் ரத்த நாளங்களை பாதிப்பதாகும். நோயாளிகளின் கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையால், காலப்போக்கில் இது ரத்த நாளங்களை பலவீனமடைய செய்து, ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.
இதனால், மூளைக்கு தெளிவான காட்சி சமிக்ஞைகளை அனுப்பும் விழித்திரையின் திறன் சீர்குலைகிறது.
நீரிழிவு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், ரத்த நாளங்கள் பாதிப்பதோடு, சேதம், வீக்கம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இதற்கு உரிய சிகிச்சை பெறாவிட்டால், நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்.
வழக்கமான கண் பரிசோதனை செய்வதன் வாயிலாக, நீரிழிவு விழித்திரை பாதிப்பை முன்கூட்டியே கண்டறிய முடியும்.
ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது, முறையான உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவை, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்கும்.
புகைப்பிடிப்பதை தவிர்த்து, மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று, கண் தொடர்பான பிரச்னைகளை தவிர்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

