/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்காய வியாபாரி ரயிலில் அடிபட்டு பலி
/
பெருங்காய வியாபாரி ரயிலில் அடிபட்டு பலி
ADDED : செப் 24, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி,செங்குன்றம், அண்ணா நகர், கரிகாலன் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராமுலு, 27; பைக்கில் சென்று, வீதிதோறும் பெருங்காயம் விற்பனை செய்து வந்தார். இவருக்கு, மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு, மருத்துவமனைக்கு செல்வதாக கூறி சென்றார். இந்நிலையில், ஆவடி அடுத்த இந்து கல்லுாரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, சென்னை சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார்.
தகவலறிந்த ஆவடி ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.