/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்
/
உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்
உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்
உணவு தருபவரிடம் வாக்குவாதம்: செய்தவரை கடித்து குதறிய நெருநாய்
ADDED : டிச 08, 2025 04:54 AM
சென்னை: திருவல்லிக்கேணி பகுதியில், தனக்கு உணவு தரும் நபரிடம் வாக்குவாதம் செய்த நபரை தெருநாய் கடித்து குதறியது.
திருவல்லிக்கேணி நடுக்குப்பம், 3வது தெருவைச் சேர்ந்தவர் தமிழ்வாணன், 59; மீனவர். இவர், நேற்று மாலை 6:00 மணியளவில், அதே பகுதியில் 6வது தெருவில் உள்ள, குடிநீர் அடிகுழாயில் தண்ணீர் பிடித்துள்ளார். அப்போது, அந்த பம்பில் இருந்து சத்தம் வந்துள்ளது.
இதனால், அந்த தெருவில் வசித்து வரும் எழில் என்பவர், இங்கு தண்ணீர் பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
அப்போது, தமிழ்வாணனுக்கும் எழிலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, எழில் தினமும் உணவு தந்து வளர்த்து வரும் தெரு நாய் ஒன்று, தமிழ்வாணனின் இடது காலை கடித்து குதறியுள்ளது. உடனடியாக, ஆட்டோவில் ஏறிச் சென்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் புற நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, மெரினா காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.