/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழந்தையின் பிறந்தநாள் அழைப்பிதழ் கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலி
/
குழந்தையின் பிறந்தநாள் அழைப்பிதழ் கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலி
குழந்தையின் பிறந்தநாள் அழைப்பிதழ் கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலி
குழந்தையின் பிறந்தநாள் அழைப்பிதழ் கொடுக்க சென்ற தாய் விபத்தில் பலி
ADDED : பிப் 09, 2025 12:38 AM

புழல், புழல் அருகே புத்தகரம், எலிசபெத் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ், 26. இவர், பினாயில், சோப்பு விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். இவரது மனைவி ஜெனிபர், 22.
இவர்களது குழந்தையின் முதலாவது பிறந்த நாள் விழா பத்திரிகையை உறவினர்களுக்கு கொடுக்க, நாகராஜ் மற்றும் ஜெனிபர் வீட்டில் இருந்து பைக்கில், நேற்று அம்பத்துார் சென்று கொண்டிருந்தனர்.
கள்ளிக்குப்பத்தில் இருந்து அம்பத்துார் செல்லும் அணுகுசாலை வேகத்தடை அருகே, பின்னால் வந்த டாரஸ் லாரி இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில், இருவரும் கீழே விழுந்தனர். எழுந்து சுதாரிப்பதற்குள் லாரியின் முன்பக்க சக்கரம், ஜெனிபரின் தலைமீது ஏறியதில் அங்கேயே உயிரிழந்தார். நாகராஜ் காயங்களுடன் தப்பினார்.
மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் மனோகரன், 41, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.