/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடில் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டியோருக்கு வலை
/
கோயம்பேடில் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டியோருக்கு வலை
கோயம்பேடில் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டியோருக்கு வலை
கோயம்பேடில் ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டியோருக்கு வலை
ADDED : நவ 03, 2025 02:23 AM
சென்னை: கோயம்பேடில், ஆட்டோ ஓட்டுநரை ஓட ஓட விரட்டி வெட்டியோரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கொளத்துார், விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன், 37; ஆட்டோ ஓட்டுநர். இவர், நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே சவாரிக்காக காத்துக் கொண்டிருந்தார்.
அப்போது, ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர், அவரை கத்தியால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பியோடிய கணேசன், அருகே உள்ள ஹோட்டலுக்குள் சென்றார்.
விடாமல் விரட்டிச் சென்றவர்கள் ஹோட்டலுக்குள் புகுந்து, கத்தியால் ஓட்டுநரை வெட்டி தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த கணேசனை, அங்கிருந்தோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு அவரது தலையில், 15 தையல்கள் போடப்பட்டன. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கோயம்பேடு போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அதே பகுதியைச் சேர்ந்த விக்கி, 28, ஜீவா, 20, சின்ன கருப்பு, 19, பெரிய கருப்பு, 20 உள்ளிட்ட ஆறு பேர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பழைய குற்றவாளியான கணேசன், தற்போது எந்த குற்ற சம்பவங்களிலும் ஈடுபடாமல் இருந்து வந்ததும், தாக்கியவர்கள் குறித்து போலீசாரிடம் தகவல் கொடுத்து வந்ததாக நினைத்து தாக்கப்பட்டதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.

