/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மயிலை பி.எஸ்., பள்ளியில் சந்தித்து குதுாகலித்த முன்னாள் மாணவர்கள்
/
மயிலை பி.எஸ்., பள்ளியில் சந்தித்து குதுாகலித்த முன்னாள் மாணவர்கள்
மயிலை பி.எஸ்., பள்ளியில் சந்தித்து குதுாகலித்த முன்னாள் மாணவர்கள்
மயிலை பி.எஸ்., பள்ளியில் சந்தித்து குதுாகலித்த முன்னாள் மாணவர்கள்
ADDED : நவ 03, 2025 02:22 AM

சென்னை: ''ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான், இந்த உயர் பணியில் அமர முடிந்தது. தற்போதைய மாணவர்கள், செயற்கையான வாழ்க்கை வாழ்கின்றனர்,'' என, தமிழக முதல்வரின் தனிச் செயலர் எம்.எஸ்.சண்முகம் தெரிவித்தார்.
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ்.மேல்நிலைப்பள்ளியில், 1975ம் ஆண்டு, 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், 50 ஆண்டுகளை கடந்து சந்தித்த நிகழ்ச்சி, அப்பள்ளியில் நேற்று நடந்தது.
பள்ளியில் படித்த விளையாட்டு வீரர்கள், 40 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், பள்ளிக்கு, 25 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக முதல்வரின் தனிச் செயலர் சண்முகம் பேசியதாவது:
இந்த பள்ளியில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்தேன். அந்த அனுபவங்களை மறக்க முடியாது. பள்ளியில் நுழையும்போது, அந்த நினைவுகள் மீண்டும் துளிர்கின்றன.
பள்ளி நண்பர்களை சந்திக்க பல வழிகளில் முயன்றேன்; அது கடினமானது. ஆனால், 1975ம் ஆண்டு மாணவர்கள், அதை சாத்தியமாக்கி உள்ளனர்.
ஆசிரியர்கள் சொல்லிக் கொடுத்ததால்தான், முதல்வரின் தனி செயலர் பணியில் அமர முடிந்தது. தற்போது, மொபைல் போனில் அனைத்தும் வந்து விடுகிறது. தற்போதுள்ள மாணவர்கள், செயற்கையான வாழ்க்கை வாழ்கின்றனர்.
இப்பள்ளியை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தொடர்புடைய பணியில்தான் உள்ளேன். மக்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் சங்கர், துணை ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்வில், வருமான வரித்துறை முன்னாள் அதிகாரி ஸ்ரீதர், இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் சுந்தரராஜன் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

