/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மதுபானத்தை பிரிப்பதில் தகராறு நடைபாதைவாசி அடித்துக்கொலை
/
மதுபானத்தை பிரிப்பதில் தகராறு நடைபாதைவாசி அடித்துக்கொலை
மதுபானத்தை பிரிப்பதில் தகராறு நடைபாதைவாசி அடித்துக்கொலை
மதுபானத்தை பிரிப்பதில் தகராறு நடைபாதைவாசி அடித்துக்கொலை
ADDED : ஏப் 24, 2025 12:25 AM
சென்னை, ஏப். 24-
சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே, மதுபானத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், நடைபாதை வாசி அடித்துக் கொல்லப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருடன் ஊர், பெயர் தெரியாத, 55 வயது நபரும், பிச்சை எடுத்து வந்தார். இருவரும் நடைபாதையில் வசித்து வந்தனர்.
இருவரும், 21ம் தேதி அன்று பிச்சை எடுத்ததில் கிடைத்த பணத்தில், பெரியமேடில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கி உள்ளனர். மதுபானத்தை பங்கு பிரித்தனர்.
சரி பாதியாக பிரிக்காமல், ஊர், பெயர் தெரியாதவர் அதிகம் ஊற்றிக் கொண்டதால் ஆத்திரமடைந்த குமார், தான் நடக்க பயன்படுத்தும் ஊன்றுகோளால், அவரை சரமாரியாக தா்கினார்.
இதில் பலத்த காயமடைந்த அவர், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
இதுகுறித்து, பெரியமேடு போலீசார் வழக்கு பதிந்து, தஞ்சாவூரைச் சேர்ந்த குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இறந்தவர் யார் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

