/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குழாய் உடைப்பு சீரமைத்த சாலையில் மீண்டும் பள்ளம்
/
குழாய் உடைப்பு சீரமைத்த சாலையில் மீண்டும் பள்ளம்
ADDED : ஏப் 23, 2025 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.கே., நகர், கோடம்பாக்கம் மண்டலம், கே.கே., நகரில், 700 மீட்டர் துாரம் உடைய பொன்னம்பலம் சாலை உள்ளது.
இது, பி.வி.ராஜமன்னார் சாலை, எம்.ஜி.ஆர்., நகர் அண்ணா பிரதான சாலையை இணைக்கிறது.
இச்சாலையில், நிலத்திற்கு அடியில் புதைக்கப்பட்ட கழிவுநீர் குழாயில் சில மாதங்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டு, மெகா பள்ளம் உருவானது. உடைப்பு சரிசெய்த பின், சமீபத்தில் தார் சாலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அதே இடத்தில் மீண்டும் கழிவுநீர் குழாய் உடைப்பால், சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வாரிய அதிகாரிகள், சாலையில் பள்ளம் தோண்டி, குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.