/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரும்பாக்கத்தில் மாடுகள் உலா நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
/
அரும்பாக்கத்தில் மாடுகள் உலா நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
அரும்பாக்கத்தில் மாடுகள் உலா நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
அரும்பாக்கத்தில் மாடுகள் உலா நிரந்தர தீர்வு காண வேண்டுகோள்
ADDED : மார் 04, 2024 01:42 AM

அரும்பாக்கம்:சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றும் மாடுகள் மீது, மாநகராட்சி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்தாலும், இந்த பிரச்னைக்கு விடிவு கிடைப்பதில்லை.
அசம்பாவிதங்களை தடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டாலும், பொதுமக்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது.
கடந்த ஆண்டு அரும்பாக்கம் பகுதியில், பள்ளி சிறுமியை மாடு முட்டி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், திருவல்லிக்கேணியில் இருவரை மாடு முட்டியது.
போரூர் அருகே அய்யப்பன்தாங்கல் பகுதியில், கர்ப்பிணி உட்பட மூன்று பேரை, ஒரே நாளில் மாடு முட்டியதில், மூவர் காயமடைந்தனர்.
குறிப்பாக, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியில், மாடுகள் அதிக அளவில் சுற்றி வருகின்றன.
அதுமட்டுமின்றி, அந்தந்த தெருக்களில் மாடுகளை கட்டி வைத்து, அவற்றுக்கு தீவனம் வைப்பது சாலையிலேயே நடக்கிறது.
அதேபோல், வீட்டின் வாசல்களில் மாடுகள் சாணம், சிறுநீர் கழித்துச் செல்வதால், அப்பகுதியில் வசிப்போருக்கும், மாட்டின் உரிமையாளர்களுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடக்கிறது.
அதுமட்டுமின்றி காலையும் மாலையும், குடியிருப்புகளில் மாடுகள் வலம் வருவதால், அங்கு வசிக்கும் சிறுவர் உட்பட பொதுமக்கள் சாலையில் செல்லவே அச்சப்படுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

