/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பயணியருக்கு இடையூறை தடுக்க தனித்தனி இருக்கையுடன் நிழற்குடை
/
பயணியருக்கு இடையூறை தடுக்க தனித்தனி இருக்கையுடன் நிழற்குடை
பயணியருக்கு இடையூறை தடுக்க தனித்தனி இருக்கையுடன் நிழற்குடை
பயணியருக்கு இடையூறை தடுக்க தனித்தனி இருக்கையுடன் நிழற்குடை
ADDED : ஜன 20, 2025 02:38 AM

சோழிங்கநல்லுார்:சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, ஓ.எம்.ஆர்., குமரன் நகரில் பேருந்து நிறுத்தம் உள்ளது. பல ஆண்டுகளாக, அங்கு நிழற்குடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில், வார்டு கவுன்சிலர் மேம்பாட்டு நிதி, 16.70 லட்சம் ரூபாயில், நிரந்தர கான்கிரீட் கட்டமைப்புடன் கூடிய நிழற்குடை அமைக்கப்பட்டது.
வழக்கமாக மூன்று, நான்கு, ஐந்து பேர் அமரக்கூடிய ஒரே இருக்கை அமைக்கப்படும். அதில் இரண்டு ஆண்கள் அமர்ந்தால், பெண்கள் அமர முடியாமல் கால் கடுக்க காத்திருப்பர்.
சிலர் போதையில் அதில் துாங்கிவிடுவர். இதனால், பெண் பயணியர் மிகவும் சிரமப்படுவர்.
அதுபோன்ற பிரச்னை இந்த நிழற்குடையில் வராமல் தவிர்க்க, இருவர் அமரும் இருக்கை மற்றும் ஆறு தனித்தனி இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பெண் பயணியர் மகிழ்ச்சி அடைந்தனர்.