/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
/
காதல் விவகாரத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து
ADDED : மார் 20, 2024 12:13 AM
கிண்டி, வேளச்சேரியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் விக்னேஸ்வர், 20. நேற்று முன்தினம் மாலை கல்லூரியில் இருந்து வெளியே வரும்போது, ஒரு கும்பல் இவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடியது.
பலத்த காயமடைந்த அவர், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கிண்டி போலீசார் விசாரித்தனர்.
விக்னேஷ்வர், அதே கல்லுாரியை சேர்ந்த ஒரு மாணவியை காதலித்து, கருத்து வேறுபாட்டால் இருவரும் சில மாதங்களுக்கு முன் பிரிந்துள்ளனர். இந்நிலை யில், மீண்டும் அதே பெண்ணை, விக்னேஷ்வர் காதலிக்க வலியுறுத்தி உள்ளார்.
மாணவி, தன் சகோதரரிடம் கூறியுள்ளார். அவர், நண்பர்களுடன் சேர்ந்து விக்னேஸ்வரை கத்தியால் குத்தியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, கே.கே.நகரை சேர்ந்த அஜய், 23 மற்றும் நண்பர்களான சஞ்சய், 20, சந்துரு,18, ஆகாஷ், 19, விக்னேஷ், 19 ஆகிய ஐந்து பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

