/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1.73 கோடி 'டிரேடிங்' மோசடி தலைமறைவு ஏஜன்ட் சிக்கினார்
/
ரூ.1.73 கோடி 'டிரேடிங்' மோசடி தலைமறைவு ஏஜன்ட் சிக்கினார்
ரூ.1.73 கோடி 'டிரேடிங்' மோசடி தலைமறைவு ஏஜன்ட் சிக்கினார்
ரூ.1.73 கோடி 'டிரேடிங்' மோசடி தலைமறைவு ஏஜன்ட் சிக்கினார்
ADDED : அக் 26, 2025 01:26 AM

சென்னை: அண்ணா நகரில், 'டிரேடிங்' நிறுவனம் நடத்தி 1.73 கோடி ரூபாய் சுருட்டிய வழக்கில், தலைமறைவாக இருந்த ஏஜன்ட் கைது செய்யப்பட்டார்.
வில்லிவாக்கம், கிழக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 45; தனியார் நிறுவன ஊழியர். தொழில் தொடர்பாக, திருமுல்லைவாயல் கே.கே.நகரைச் சேர்ந்த சண்முகம், 57 என்பவர் அறிமுகமாகி உள்ளார்.
அண்ணாநகர் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் இயங்கி வரும் வர்த்தக நிறுவனத்தில், ஏஜன்ட்டாக பணிபுரிந்த சண்முகம், 'தங்கள் நிறுவனத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 10 மாதத்தில் இரட்டிப்பாக்கி தரப்படும்' என, வெங்கடேசனிடம் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
இதை நம்பிய வெங்கடேசன், 2022ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை, 10 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.
இதேபோன்று 35க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் இருந்து, 1.73 கோடி ரூபாய் வசூல் செய்து, நிறுவனத்தில் செலுத்தி 'கமிஷன்' பெற்றுள்ளார்.
ஆனால் வாக்குறுதி அளித்தபடி, முதலீட்டாளர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேசன் உட்பட 36 பேர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடியில் கடந்த ஜூலை 10ம் தேதி, நிறுவனத்தின் உரிமையாளரான முனவர் உசேனை கைது செய்தனர்.
தலைமறைவான ஏஜன்ட் சண்முகம், நேற்று திருமுல்லைவாயல் வந்திருப்பதை அறிந்து, அங்கு சென்று சுற்றிவளைத்து கைது செய்தனர்.

