/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.எம்., நார்மஸ் செஸ் போட்டி அர்னாவ், சாமயக் முன்னிலை
/
ஐ.எம்., நார்மஸ் செஸ் போட்டி அர்னாவ், சாமயக் முன்னிலை
ஐ.எம்., நார்மஸ் செஸ் போட்டி அர்னாவ், சாமயக் முன்னிலை
ஐ.எம்., நார்மஸ் செஸ் போட்டி அர்னாவ், சாமயக் முன்னிலை
ADDED : அக் 26, 2025 01:25 AM
சென்னை: ஐ.எம்., நார்மஸ் க்ளோஸ்டு செஸ் போட்டியில், இந்தியாவின் அர்னாவ் மகேஸ்வரி, சாமயக் தாரிவ் ஆகியோர், முன்னிலையை தக்க வைத்தனர்.
சக்தி குரூப் ஆதரவில், ஐ.எம்., நார்ம்ஸ் க்ளோஸ்டு சர்க்யூட் செஸ் போட்டி, போரூரில் நடந்து வருகிறது. இந்திய வீரர்கள் ஐந்து பேர், வெளிநாட்டை சேர்ந்த ஐந்து வீரர்களுடன் மோதி வருகின்றனர்.
மொத்தம் ஒன்பது சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடக்கின்றன. நேற்று நடந்த ஏழாவது சுற்று முடிவில், இந்தியாவின் அர்னாவ் மகேஸ்வரி மற்றும் சாம்யக் தாரிவ் ஆகிய இருவரும், தலா 6 புள்ளிகளில் முன்னிலையில் உள்ளனர்.
பெலாரஸின் எவ்ஜெனி பொடோல்சென்கோ, இந்தியாவின் மாதேஷ் குமார் ஆகியோர் தலா 5 புள்ளிகளில் அடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தியாவின் ஜெய்சங்கர் 3.5 புள்ளிகளிலும், பெரு நாட்டின் கார்லோமாக்னோ ஒப்லிடாஸ் 3 புள்ளிகளும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.

