/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது
/
தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கைது
ADDED : ஜூலை 23, 2025 12:18 AM
சென்னைதலைமறைவாக இருந்த, இரு குற்றவாளிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கொட்டிவாக்கம் நடேசன் காலனியில், 'கிரீன் பீல்டு எக்கியுப்மென்ட்ஸ்' பிரைவேட் லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. அந்நிறுவனத்திற்கு சொந்தமான, டிராக்டர் தயாரிக்கும் வரைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், 2005ம் ஆண்டு திருடு போனது.
இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து ஆவணங்களை திருடிய, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா, 55, விஜயலட்சுமி, 52 ஆகிய இருவரை கைது செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் ஜாமினில் வெளியே வந்த இருவரும் தலைமறைவாகினர். தொடர்ந்து வழக்கு விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால், 2024ம் ஆண்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த, ராஜா, விஜயலட்சுமி ஆகிய இருவரை நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.